``அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று மாவட்ட ஆட்சியர்களை இன்று சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அப்போது ஆட்சியர்களிடையே அவர் பேசுகையில், “மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை அதை இணைத்து தெரிவிக்க வேண்டும். எங்களுக்கும் உங்களுக்கும், அதாவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்.

image

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து நீங்கள் கூறலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது. அது மஞ்சளா இருக்கலாம், இயற்கை வளங்கள் ஆக இருக்கலாம் அவற்றை எப்படி மார்க்கெட் எப்படி அரசுக்கு வருமானம் பெறுவது குறித்து விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து கருத்துக்களை எல்லாம் தெரிவிக்கலாம்.

நேர்மையான நிர்வாகம் - வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து உங்களுடைய ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களை கேபதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது. அவற்றை எப்படி சந்தைப்படுத்தி அரசுக்கு வருமானம் பெறுவது, அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்கலாம்” என்றார்.

சமீபத்திய செய்தி: பராமரிப்பு மையத்தில் நாயை அடித்து கொலைசெய்த ஊழியர்: சிசிடிவி காட்சியால் அம்பலமான குற்றம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post