"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம்" - பழனிவேல் தியாகராஜன்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு தெரிவித்தார். மத்திய அரசின் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குவதாகவும் கூறினார். கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதை தங்கள் அரசு படிப்படியாக சரி செய்து வருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post