முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக பிரமுகரை தாக்கியது, போராட்டத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் பிணை கிடைத்த நிலையில் நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து இன்று காலை புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வந்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி மற்றும் ஏராளமான அதிமுகவினர் சிறை வளாகத்தில் குவிந்து அவரை வரவேற்றனர். பின்னர் பேசிய ஜெயக்குமார், திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். திமுக அரசு தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக தெரிவித்த ஜெயக்குமார், அதிமுகவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News