கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு. நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 11 பேர் ஓவேலி பகுதியிலுள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது சையது அஃப்ரித் என்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உள்ளார்.
இதையடுத்து சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். தகவல் அறிந்த ஊர் மக்களும் தண்ணீரில் மூழ்கிய மாணவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஆனால் முடியவில்லை. இந்நிலையில் சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் மூழ்கி மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News