ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், இளவரசி இன்று ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராக உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், இறுதிகட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வமும், இளவரசியும் இன்று ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலை 10.30 மணிக்கு இளவரசியிடமும், 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்திடமும் விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: மதுரை: ஹிஜாப் விவகாரத்தில நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் - தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post