எம்.ஜி.ஆர் வேடமணிந்து காலில் விழுந்தவரை தடுக்கத் தவறியதாக எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மாவட்ட எம்ஜிஆர் புரட்சி சங்கம் சார்பில் விழா மேடையில், எம்ஜிஆர் வேடம் அணிந்தவர் காலில் விழுந்ததை தடுக்கத் தவறி அவமரியாதை செய்ததாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினார். எம்.ஜி.ஆரை அவமரியாதை செய்ததாக எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர் புரட்சி சங்க பொதுச் செயலாளர் கோவை சண்முகம், மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News