பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு 30 நாட்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கப்படுகிறது.

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரம் குறைப்பு... | nakkheeran

இதேபோல, ஒரு மாதத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்தி பயணித்த 10 பயணிகளை தேர்ந்தெடுத்து குலுக்கல் முறையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதே போன்று பயண அட்டை வாங்கிய பயனாளர்களுக்கும் இலவச டாப்அப் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post