"அரியலூர் மாணவி தற்கொலை ”- அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கைக்கு முரணான தகவல்கள் பரப்பப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்விவகாரத்தில் பாஜக எதற்காகப் போராடியதோ, அதை நியாயம் என்று நிலைநாட்டி நடுநிலையான அறிக்கையை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கி உள்ளது. இந்த அறிக்கை பற்றி உண்மைக்குப் புறம்பான, பொய்யான, தவறான தகவல்களை மக்களை ஏமாற்றும் வகையில் பரப்புவதை பாரதிய ஜனதா சார்பில் கடுமையாக கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post