"பிரதமர் ஆசையுடன் மோடியை எதிர்க்கிறார் ஸ்டாலின்"- அண்ணாமலை

‘பிரதமர் ஆசையுடன் கும்பலை சேர்த்துக் கொண்டு மோடியை எதிர்க்கிறார் ஸ்டாலின்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்றுவரும் மாசி கொடை விழாவின் முக்கிய நாளான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஹைத்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

image

அதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஒரே நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் அதிபர்களிடம் பேசிய ஒரே பிரதமர் மோடிதான். மோடியை எதிர்க்க பிரதமர் ஆசையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் கும்பலாக கிளம்பியுள்ளனர். உக்ரைனில் சிக்கத் தவித்த மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ள நிலையில் தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்பு பணிக்கு செலவு செய்திருப்பது, அமைச்சர்கள் டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான் என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post