
கும்மிடிப்பூண்டியில் 1 நிமிடத்தில் 38 முறை கண்டபேருண்டாசனம் செய்து 6 வயது சிறுமி உலக சாதனை படைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன் - லட்சுமி தம்பதியரின் 6 வயது மகள் தேஜாஸ்ரீ, இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருவதோடு, அதே பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2 ஆண்டுகளாக யோகாசன பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சிறுமி தேஜாஸ்ரீ தலை கவிழ்ந்து படுத்தபடி 1 நிமிடத்தில், 38 முறை தமது இரு கால்களையும் தலைக்கு முன் கொண்டு வரும் கண்டபேருண்டாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் ஆவம்சம் உலக சாதனை' புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன.

உலக சாதனை படைத்த சிறுமி மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த யோகா பயிற்றுநர் சந்தியா ஆகியோரை பள்ளி நிர்வாகமும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும் வெகுவாக பாராட்டினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News