"21 நாட்களாக உணவு இல்லை" - கோவையில் உயிரிழந்த பெண் யானை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகம் வெள்ளைபதி தானிக்கண்டி சராகத்தில் தாடையில் காயம் ஏற்பட்ட பெண் யானை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

போளுவாம்பட்டி பகுதியில் நேற்றைய முன்தினம் சோர்வுடன் பெண் யானை ஒன்று சுற்றி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்ப்டையில், அந்த யானையை பிடித்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், யானையின் வாய் பகுதி சிதைந்து நாக்குப்பகுதியும் அறுபட்டு காணப்படுவதால் யானைக்கு காயம் அவுட்டுக்காய் எனப்படும் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு வெடியால் வாய் சிதைவு ஏற்பட்டதா? அல்லது யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் வாயில் காயம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

image

இந்த யானைக்கு கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ள பதி பிரிவு முள்ளங்காடு  பகுதியில்  கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மேற்பார்வையில் கோவை வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மற்றும் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். உணவு உண்ண முடியாமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட யானைக்கு  குளுக்கோஸ் மற்றும் நீர்சத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.



உயிரிழந்த இந்த 10 வயது பெண் யானைக்கு அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு கடித்து வாயில் காயம் ஏற்பட்டது என யானையின் உடல் பிரேத பரிசோதனையின் முடிவு வந்துள்ளது. மேலும், 21 நாட்களாக யானை உணவும் தண்ணீரும் உட்கொள்ளவில்லை, பிரேத பரிசோதனையில் யானையின் உடலில் எந்த சத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post