
இந்தியாவுக்கு 2014-க்கு பிறகு தான் சுதந்திரம் கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி மனித நேயத்திருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய சிதம்பரம், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மனநிறைவாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசு தொடர்ந்து வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி : அமைச்சர் ஐ.பெரியசாமி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News