"கண்ணும் கருத்துமாக செயலாற்றுங்கள்"- திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும்.

நாம் அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்! நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் அமைதிகாத்து, சட்டப்படி எதிர்கொள்வோம்!

image

மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாட்டின் கடைக்கோடி மனிதரும், ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே முதலமைச்சரான எனது எண்ணம். மக்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மிகுந்துள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்தி: வேலூர்: பாப்கார்னுடன் 'வலிமை' டிக்கெட் இலவசம்- அதிரடி அறிவிப்பு வழங்கிய கூட்டுறவு அங்காடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post