
தமிழகத்தில் கோயில்களை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்பை செம்மைப்படுத்தவும் இந்தக் குழு செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட அந்தக் குழுவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் இணைகின்றனர்.
தொடர்புடைய செய்தி: தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு வாபஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News