சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தடை: ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் விழாக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடுகின்ற திருவிழாக்களுக்கு முற்றிலுமாக அரசு தடை செய்துள்ளது.

image

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பொங்கல் பண்டிகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஒகேனக்கலுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பொங்கல் 14.01.2022 முதல் 18.01.2022 வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post