கடவுள் சிலையை ஆஜர்படுத்த தேவையில்லை - கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கண்டனம்

சிலைக்கடத்தல் வழக்கில், கடவுள் சிலையை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் சிவிரிபாளையத்தில் உள்ள பரமசிவன் சுவாமி கோயிலில் கடத்தப்பட்ட மூலவர் சிலை மீட்கப்பட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை, கோயில் நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு பூஜைகளும் முறைப்படி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது, ஆய்வு செய்வதற்காக கடவுள் சிலையை ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சிலையை கடவுளாக மக்கள் நம்பும் நிலையில், அதனை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார். சிலையை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், அதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சிலையை பீடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post