நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மநீம

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தளுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

முதல்கட்டமாக கோயமுத்தூர் மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய 47 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழலிலும்,லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. பல ஆண்டுகளாக கதறியும் தீர்க்கப்படாத பிரச்னைகள் தமிழகம் முழுவதும் உள்ளது.தேர்தலில் வென்று அவற்றை தீர்க்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

image

நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மநீமவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்" என தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post