முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்திருந்த விஜய நல்லதம்பி வேறு ஒரு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்திருந்த விஜய நல்லதம்பி ரவீந்திரன் என்பவர் பணமோசடி புகார் கொடுத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டியில் காவல் துறையினர் கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM