திடீரென ஏற்பட்ட வாந்தி பேதி - 6 வயது சிறுமி உயிரிழப்பு; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திடீரென ஏற்பட்ட வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மோகன ஜோதி என்ற 6 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட துயர் நீங்குவதற்குள் அந்தச் சிறுமியின் சகோதரன் பாரதி, தந்தை கார்த்திக் உள்ளிட்ட 8 பேருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் விராலிமலை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

image

இதுகுறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூனனிடம் கேட்டபோது, பொங்கலின்போது உட்கொண்ட உணவால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறினார். சிறுமி மோகன ஜோதிக்கு ஏற்கெனவே நரம்பு பிரச்னை இருந்ததாகவும், அத்துடன் ஒவ்வாமையும் சேர்ந்து கொண்டதால் அவர் இறந்துவிட்டதாகவும் அர்ஜூனன் விளக்கமளித்தார்.

image

விராலிமலை அருகே இயங்கிவரும் உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை கழிவுகள் அருகிலேயே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்று ஊர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post