அணிவகுத்து கொண்டுசெல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள் - விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டுசென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் மற்றொரு ஆம்புலன்ஸின்மீது மோதி விபத்துக்குள்ளானது.

வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் வரிசையாகக் கொண்டுசெல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது போக்குவரத்து தடைபட்டதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. திடீரென வேகத்தைக் குறைத்ததால் முன்னால் சென்ற ஆம்புலன்ஸ்மீது பின்னால் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக அதிலிருந்த ராணுவ வீரரின் உடலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாகக் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டுசென்றனர். சற்று நேரத்திற்குமுன்பு பாதுகாப்புச் சென்ற காவல் வாகனம் பர்லியார் அருகே விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post