
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி மற்றும் வீரர்களின் உடலுக்கு மாணவர்கள் தேசிய கொடியுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் சென்ற ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட பதினோரு ராணுவ வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதில், ராணுவ தளபதி அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் அமரர் ஊர்தி மூலம் கோவை மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம் பேட்டை, வழியாக சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடி ஏந்தியவாறு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News