
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றதாக இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் 10 படகுகளையும் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச ஏற்பாடு மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலமாகத்தான் இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதால், மீனவர்களுக்கான வழக்கறிஞர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய பெசன்ட் நகர் மீட்பு குழு காவலர்கள்
இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டுமென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு அரசியம் கட்சியினரும் மீனவர்கள் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News