பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச்சு. இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே கோதவாடி கிராமத்தில் உள்ள குளம் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதை கொண்டாடும் விதமாக குளக்கரையில் கிராம பொதுமக்கள் பொங்கல் விழா நடத்தினர். இதில், பங்கேற்க வந்த முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகரும் தற்போதைய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை வந்திருந்தார்.
இந்நிலையில், அப்பகுதி தி.மு.க.,வினர் அவரை வெளியேறச் சொல்லி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கிருந்த அதிமுக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் காலணிகளை வீசினர். இதில், கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது காலணி விழுந்தது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமனை, அங்கிருந்து கட்சியினரும் போலீசாரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கோதவாடி கிராம மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News