
புத்தாண்டை எதிர்பார்த்து அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளை தயார் செய்யும் நட்சத்திர விடுதிகள், இந்த ஆண்டு இதுவரை எந்த முன்னேற்பாடும் செய்யாமல் காத்திருக்கிறார்கள். காரணங்கள் என்ன?
இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. வழக்கமாக ஒரு மாதம் முன்பே புத்தாண்டு நிகழ்வுக்காக நட்சத்திர ஒட்டல்களில் முன்பதிவு நடக்கும். இந்த ஆண்டோ, அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் காவல்துறை அனுமதி இன்னும் கிடைக்காததால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் இருப்பதாக கூறுகிறார்கள் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தினர்.

சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் நட்சத்திர ஒட்டல் மற்றும் விடுதிகளில் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர். டிசம்பர் 31 அன்று இரவு நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்தால் கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை மட்டும் ஒட்டல்களில் அனுமதிக்க தயாராக இருப்பதாகவும் நட்சத்திர ஹோட்டல்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஒமைக்ரான் தொற்று முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் அவசியமானது என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: ’புஷ்பா’ திரை விமர்சனம் : பார்த்துச் சலித்த அதே மசாலாப் படம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News