நெகிழி பயன்பாட்டை குறைக்க 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் - இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர்

நெகிழிப் பொருட்களுக்கு எதிரான மஞ்சள் பை இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில், இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாகப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சியும் இடம்பெற உள்ளது.

அமெரிக்கா: கொரோனாவுக்கு எதிராக வந்துவிட்டது ஃபைசரின் மாத்திரை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post