
விருதுநகரில் 4 வயது சிறுமி, 31 நிமிடம் 23 நொடிகள் சமகோனாசனம் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்தார்
விருதுநகரைச் சேர்ந்த பாண்டி பிரபு - ஜெயபாரதி தம்பதியினரின் மகள் ஹாசினி (4). யு.கே.ஜி படித்து வரும் ஹாசினி, கடந்த ஒரு வருடமாக யோகாசனம் கற்று வருகிறார். இந்நிலையில், யோகாசனத்தில் சாதனை படைக்க என்ற ஆர்வத்தில் இருந்து சிறுமிக்கு பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் உறுதுணையாக இருந்தனர்.

இதையடுத்து அர்த்த சமகோனாசனம் என்ற யோகசனத்தை இருபுறமும் முட்டைகள் மீது கால்களை வைத்தவாறு 31 நிமிடம் 23 நொடிகள் யோகசனம் செய்து சாதனை புரிந்தார். இதற்கு முன்பு இதே சாதனையை தஞ்சாவூரை சேர்ந்த 4 வயது சிறுவன் 25 நிமிடம் செய்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இன்று இந்த சாதனையை ஹாசினி முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

இதைத் தொடர்ந்து நோபல் வேர்ல்டு ரிகார்ட்ஸ் சென்னை நிர்வாக இயக்குநர் அரவிந்த், திருஞானராமன் சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழையும் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், பயிற்றுநர் மாலினி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News