
நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருந்தது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் உயிரிழப்பு தற்போது மூன்றாக உயர்ந்துள்ளது. நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேரில் பள்ளிக்கட்டடத்தை தற்போது பார்வையிட்டுள்ளார்.

உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு பள்ளியிலிருந்து பிற மாணவர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். தற்போதைக்கு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து பெற்றோர் பலரும் நேரடியாக வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.
தொடர்புடைய செய்தி: நெல்லை: பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து; 2 மாணவர்கள் உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News