தேனி: 21 மாதங்களுக்குப் பிறகு கேரளாவுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து-தொழிலாளர்கள் மகிழ்ச்சி

கேரளாவிற்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 21 மாதங்களுக்கு பின்பு கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆந்திர, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று முதல் கேரளா மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

image

கம்பத்தில் இருந்து கேரள பகுதிகளான கட்டப்பனை, நெடுங்கண்டம், சாஸ்தாநடை ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோயத் தொற்று காரணமாக இந்த பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று முதல் தமிழக அரசு கேரள மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கம்பத்திலிருந்து கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

image

இதனால் கேரளா மாநிலத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஏல தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post