
சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 12 கிலோ கஞ்சா கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 8-வது நடைமேடையில் கேட்பாரற்று பை ஒன்று கிடப்பதாக ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பையை சோதனை செய்தனர். அதில் 6 பண்டல்களில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் இதனை இங்கு வீசி சென்றது? சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News