’தை 1ஆம் தேதி கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள்’ - அமைச்சர் மெய்யநாதன் ட்வீட்-Village games on January 1 in every village

வரும் தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு என விளையாட்டுத்துறை அமைச்சர்  மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ஆனந்தகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

image

இதில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதுகுறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள அமைச்சர், தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும்  12,500 கிராமங்களில் கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post