கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் - கவிஞர் வைரமுத்து-Kamal Haasan will return home soon - Poet Vairamuthu

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ''கலைஞானி கமல்ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன். நடந்தவை - நடப்பவை சொன்னார். குணம்பெற வாழ்த்தினேன். கட்டுறுதி மிக்க உடல்; கல்லுறுதி மிக்க மனம்; மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


Poet Vairamuthu has said that he called Kamal Haasan, who was suffering from corona infection, and inquired about his health.
 
Actor and People's Justice Center chairman Kamal Haasan has been diagnosed with coronavirus. Kamhasan posted on his Twitter page that he had been confirmed to be infected after returning from a trip to the US.

He also mentioned in a Twitter post that he was isolated in the hospital. Poet Vairamuthu has said that he called Kamal Haasan and inquired about his health.
 
In this regard, Vairamuthu said in his Twitter post: - '' I called the artist Kamal Haasan and asked for his health. Happened - Told what is happening. Congratulations on your recovery. Stout body; Stony mind; What else does medical magnificence want? He will return home soon, ”he said.

Post a Comment

Previous Post Next Post