கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத ரயில் ஞாயிறு அன்றும், பாலக்காடு - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை அன்றும் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை - பொள்ளாச்சி இடையே வரும், 13ம் தேதி முதல் தினசரி மாலை, 6:15 க்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் (06419), போத்தனுார், கிணத்துக்கடவு வழியாக இரவு, 7:45க்கு பொள்ளாச்சி அடையும். பொள்ளாச்சியிலிருந்து 14 ஆம் தேதி முதல் காலை, 7:25க்கு புறப்படும் ரயில் (06420) காலை, 8:40க்கு கோவை செல்லும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமையில் இயக்கப்படாது என தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாலக்காடு - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் 14 முதல் காலை, 4:55 மணிக்கு புறப்பட்டு 06731) காலை, 6:30 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும். பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் 13 ம் தேதி முதல் இரவு, 8:50 மணிக்கு புறப்பட்டு (06732), இரவு, 10:30 மணிக்கு பாலக்காடு அடையும், இந்த ரயில் சனிக்கிழமை இயக்கப்படாது என தற்போது, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News