தருமபுரி - சேலம் இடையே தடம் புரண்ட ரயில்!

தருமபுரி அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்ட நிலையில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் அதிகாலை 3.30 மணி அளவில் தருமபுரி வந்தடைய வேண்டும். ஆனால், சேலத்திலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் உள்ள வனப்பகுதியில் தண்டவாளத்தில் அருகிலிருந்து கற்களில் உரசியதில் இன்ஜின் மற்றும் அதற்கடுத்த 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

image

இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரயிலிலிருந்த பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post