
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் மழை வெள்ளத்தால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இரும்புலியூரில் உள்ள ரோஜா தோட்டம், அருள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் அதிகளவில் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அருள் நகரில் வீடு ஒன்றின் இரண்டாவது மாடியில் வசிக்கும் 9 மாத கர்ப்பிணி லட்சுமி என்பவர் வெள்ளத்தால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவித்தார்.

இதையடுத்து அவரது கணவர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News