
குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே என்றும் தமிழ் கலாச்சாரத்தை மாற்ற திமுக முயற்சிக்கிறது எனவும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பல்லடத்தில், பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஜெ.பி.நட்டா, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பாஜக துணை நிற்கும் எனக் கூறினார்.

கொரோனா உச்சம் தொட்ட போது, 9மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு லட்சக்கணக்காண உயிர்களை பிரதமர் மோடி பாதுகாத்துள்ளார் என அவர் தெரிவித்தார். அதில், பேசிய நட்டா பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும் ஜெ.பி.நட்டா குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News