
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13இல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கடலூர் அருகே கரையைக் கடந்தாலும் தெற்கு ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News