
விருதுநகர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையோடு இருக்குமாறு தண்டோரா மூலம் அறிவித்த நிலையில், பீதியடைய வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரம் காட்டுப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் வட்டம், ஆமத்தூர் கிராமம் மீசலூர் ரோடு, சோலார் கம்பெனியை ஒட்டிய முத்துலாபுரம் காட்டுப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஆமத்தூர் ஊராட்சி தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனக் காப்பாளர் தலைமையிலான குழுவினர் அக்கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்த அறிகுறியும் தடயமும் இல்லை. ஆகவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News