தேனி டூ தூத்துக்குடி : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? - முழுவிவரம்-Holidays for school and college in which districts?

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அம்மாவட்டங்களுக்கு இன்று காலை எச்சரிக்கை விடுத்திருந்தது. போலவே தற்போது தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

கனமழை தொடர்பான இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 12 மாவட்டங்களில், இரவு 7.30 மணி நிலவரப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், ராமநாதபுரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும்; திருநெல்வேலி, தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

முன்னதாக நெல்லை, தூத்துக்குடியில் இன்று மதியமே பள்ளிகளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post