திமுக இந்து விரோத கட்சியா? அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

இந்து விரோத திமுக என பேசிய அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் 1-ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்புகளுக்கு வந்த மாணவர்களை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் இனிப்புகள் வழங்கி, பூ கொடுத்து வரவேற்றார்.

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் "மாவட்டத்தில் தேவையான அளவு வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘இந்து விரோத திமுக’ எனக் கூறியது குறித்து நிருபர் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதைபோல் பாஜக அண்ணாமலையின் பேச்சு உள்ளது என்றார்.

image

“ தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து ஜாதியினரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என்ற திமுகவின் கருத்தை பாஜக அரசு ஆதரிக்கவில்லை. மாறாக மத துவேஷத்தை உருவாக்கி திமுகவின் வாக்குவங்கியை கைபற்ற நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடைபெறாது. அனைத்து துறைகளிலும் மின்னணு வசதி ஆக்கப்படுவதால் தகுதியான மக்களுக்கு அரசு சேவைகள் சென்றடைய வழிவகுக்கும்” எனவும் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post