தலைமை செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் உயிரிழந்தார், உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இன்று காலை 9 மணியளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகில் உள்ள மரம் யாரும் எதிர்பாராத விதமாக வேராடு சாய்ந்தது. அப்போது அங்கு பணியில் இருந்து முத்தியால் பேட்டை காவல்நிலைய போக்குவரத்துக் காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். உடன் பணியில் இருந்த ராயபுரம் போக்குவரத்துக் காவலர் முருகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் உடனடியாக அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் காவலர் உயிரிழந்த தகவல் அறிந்து வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நிகழ்விடத்தில் ஆய்வு செய்ததோடு, விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனிடையே பெண் காவலர் கவிதா உயிரிழந்தது கேட்டு அதிர்ச்சியுற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கவிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப்படிக்க...தஞ்சை: மனைவி உயிரிழப்புக்கு வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததே காரணம்: கணவர் புகார் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post