”அம்மா உணவகத்தில் கருணாநிதியின் படம் இடம்பெற்றிருப்பது ஏன்?” - ஆர்.பி.உதயகுமார் கண்டனம்-"Why is Karunanidhi's picture in Amma restaurant?" - RP Udayakumar condemned

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அருகே கலைஞரின் படம் வைத்து திட்டத்தை திசை திருப்ப முயற்சிப்பது வீண் முயற்சி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

image

இது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து திட்டத்தை திசைதிருப்புகிற வகையில் ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சி.

image

கருணாநிதியின் படத்தை வைப்பதில் அரசு எடுக்கின்ற முனைப்பை, ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துவத்தை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனைப்படிக்க...நவம்பர் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post