எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? - கல்வெட்டு பிழை திருத்தப்படும் என பாஜக தகவல்-Is Nainar Nagendran the Leader of the Opposition? - BJP informed that the inscription error will be corrected

எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டில் உள்ள தகவல் பிழை திருத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
 
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் திருப்பூரில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது 4 மாவட்ட பாஜக மாவட்ட அலுவலகங்களை அவர் திறந்து வைத்தார். அப்படி திறந்து வைக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் திருப்பூர், பாஜக மாவட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்ட கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் கேட்டபோது இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் 'விரைவில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்' என்று மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post