கனமழை: சென்னை மாநகர போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் விபரம்

வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகர போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விபரங்கள்…

மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்:-

  • ஈ.வெ.ரா சாலை கங்குரெட்டி சுரங்கபாதை
  • வியாசர்பாடி சுரங்க பாதை
  • கனேஷபுரம் சுரங்க பாதை

மழைநீர்  பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:-

ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு (சி.எம்.டி.ஏ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.

பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷ்சல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்ல்லாம். மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு.

இதனைப்படிக்க...நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவேண்டும்: தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post