தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை இயக்குநர் ராஜமெளலி அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதில், ‘கோப்ரா’ இம்மாத இறுதியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் தனது புதிய படத்திற்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமை ராஜமெளலி அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, ராஜமெளலி படத்தில் நடிக்கவிருக்கிறார். ராஜமெளலியும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளில் இருக்கிறார். இரண்டு படங்களுமே ஜனவரியில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராஜமெளலி மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க தமிழ் நடிகர் நடிக்கவேண்டும் என்று விரும்பி விக்ரமை அணுகியதாகவும் அதற்கு விக்ரம் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.