
ஒரகடம் அருகே சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் ஜெயராமன். இவர் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பணி முடித்து விட்டு ஒரகடம் அருகே பனப்பாக்கம் மினி பேருந்தில் வீடு செல்ல காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ஜெயராமனை தாக்க முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய ஜெயராமனை மர்ம நபர்கள் தொடர்ந்து விரட்டிச் சென்று அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News