‘செம்மொழி நூலகம்’ அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை-Government grants administrative approval to set up ‘Classical Library’

சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் நூலகம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதில், 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post