கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் விடிய விடிய கனமழை தொடர்ந்துவருகிறது. இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: தஞ்சை: கனமழை காரணமாக அடியோடு சாய்ந்து விழுந்த நூற்றாண்டுகால பழமையான ஆலமரம்

image

தொடர்ந்து சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post