
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரையடுத்த ஜி.கே.எஸ்.நகரில் குடியிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சண்முகராஜ் (63) என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (62). இவர் தனது வீட்டு முன் பகுதியில் உள்ள தகர கூடாரத்தில் கட்டப்பட்டுள்ள கம்பியில் துணியை காயப் போட்ட துணியை எடுக்க சுப்புலட்சுமி முயன்றுள்ளார். அப்போது மேலே சென்ற மின்சார வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சுப்புலட்சுமி தூக்கி வீசிப்பட்டார்.
இதைப் பார்த்த சண்முகராஜ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News