புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூர் பள்ளியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலியின் காரணமாக, திருவாரூர் மாவட்டம் வெங்காரம்பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் குளம்போல் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு மண் கொட்டப்பட்டு சரி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டம் வெங்காரம்பேரையூர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் குளம்போல் தேங்கி தேங்கியிருந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.

அதன்பிறகு பாரதி மூலங்குடி ஊராட்சி மன்றத்தின் சார்பாக, அந்த ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளியில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி அங்கு மண்ணை கொட்டி தற்காலிகமாக சரி செய்துள்ளார்.

இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் வரவில்லை. நாளை மாணவர்கள் வருவதற்குள் முழுவதுமாக சரி செய்யப்படும் என்று அவர் நம்மிடம் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post