
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை நெருங்கி வரும் நிலையில், வானிலை தொடர்பான எச்சரிக்கையாக இந்தக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மூன்றாம் எண் புயல் கூண்டு என்பது காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்துகிறது. இதேபோல், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தரைக் காற்றும் வேகமாக வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், மீனவர்கள் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The third storm warning cage has been installed at Chennai, Ennore, Kattupalli, Cuddalore, Nagaon, Karaikal and Pondicherry ports as the depression in the Bay of Bengal has intensified into a depression.
The cage is mounted as a weather warning as the barometric depression approaches the shore. The number three storm cage indicates the possibility of heavy rain with wind. Similarly, the number one storm cage has been installed at the ports of Thoothukudi and Pamban.
Meanwhile, the state of Pondicherry is seen with sea turbulence in Karaikal. Erosion has occurred in coastal villages including Klinchalmedu, Kottucherry and Mandapathur. Fishermen took the boats parked on the shore to safety as they were warned that the ground wind could blow faster.
Tags:
News